என் சிறுவயதில் ஏற்பட்ட பிரபஞ்சத்தின் மீதான ஆர்வம் என்னை வேறு பரிமாணத்திற்கு அழைத்துச் சென்றது. தேட தொடங்கினேன்.
நேற்றுவரை எனக்கு ஓர் மாபெரும் இரகசியம் புலப்பட்டது. அதை மக்களுக்கு அறிமுகப்படுத்தவே இந்த பக்கத்தை நான் தொடங்கினேன். இங்ஙனம் பிரசாத்


30 நவ., 2015

சூரியனை சாப்பிடலாமா?



சூரியனை சாப்பிடலாமா?


அறிவியல் தளம்

வெற்றிடத்தில் குவான்டம் ஆற்றல் செயல்பட்டு மின்புலத்தை உருவாக்கியது. மின்புலம் அசைந்து காந்தபுலத்தை உருவாக்கியது. இவை இரண்டும் சேர்ந்து மின்காந்த அலைகளை உருவாக்கியது. 

இந்த அலைகள் மூன்றுவித துகள்களை உருவாக்கியது. அவை புரோட்டான் நியூட்ரான் மற்றும் எலக்ட்ரான். இவை இணைந்து அணுக்களானது. அணுக்கள் பல்வேறு விதத்தில் பிணைந்து தனிமங்கள் ஆனது. தனிமங்கள் மூலக்கூறுகள் ஆனது. மூலகூறுகள் சேர்ந்து நாம் உண்ணும் உணவுகளை உருவாக்கியது. 

இவை எல்லாம் உருவானது மின்காந்த சக்தியில் இருந்துதான் என்பது தெளிவாகிறது. மின்காந்த அலைகள்தான் ஒளி. எனவே சூரியனை நாம் உற்று நோக்கி அந்த சக்தியை கிரகிக்க முடியும்.

ஆன்மீக தளம்

நமது ஆத்ம காரகனான சூரிய பகவானை தினமும் உதயத்தின் போதும் மறைவின் போதும் கண்சிமிட்டாமல் உற்று நோக்கி நமஸ்காரம் செய்து அவரின் சக்தியை நாம் கிரகிக்க முடியும். 

அவ்வாறு செய்வதால் நாம் உண்ணும் உணவின் மூலம் நமக்கு கிடைக்கும் தாதுப்பொருட்கள் அனைத்தையும் நேரடியாக கிரகிக்க முடியும். சூரிய நமஸ்காரம் என்பது இதுவே. 

இதை தொடர்ந்து செய்யும்போது நாளாக நாளாக நாம் உணவை குறைத்து ஒருகட்டத்தில் உணவே இல்லாமல் நம்மால் உயிர்வாழக்கூடிய நிலையை அடைய முடியும். 

இதனை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்து சொன்ன நமது சித்தர்களின் வலிமை எப்பேர்பட்டது. 

கருத்தகளை எதிர்பார்க்கும் 

உங்கள் பிரசாத் 

நன்றி.

1 கருத்து:

  1. ஆன்மீக மின்காந்தம்
    மின்காந்த மயமானவர் இறைவன்,இதனை அன்றே உணர்ந்த வள்ளலார் அவர்கள் தனது ஒரு பாடலில்”உடல் கடந்தேன் முயன்று முயன்று அருளீன்ற அறிவலே மின்காந்த மயமான உயிரதுவும் கண்டேன்” என்கிறார்.
    திருமூலர் திருமந்திரத்தில் “சீவனென்ன சிவனென்ன வேறில்லை” என்கிறார். சீவனான உயிரும் சிவனும் வேறில்லை எனில்,சீவன் மின்காந்த மயமானது ஆகவே சிவனும் மின்காந்த மயமானவரே….
    இறைவனது அருளை நேர்மறை அதிர்வுகள் என்றும் இறைநிலை என்றும் இறை என்றும் இறை ஆற்றல் என்றும் மேலும் பலவாறாக குறிப்பிடுவதுண்டு அவ்வகையில் இவை அனைத்தும் ஒன்றிலிருந்து பிறந்தவையே அதுதான் மின்காந்தம்.
    வள்ளலார் இருந்த காலத்தில் பொது மக்களிடையே மின் காந்தத்தை பற்றிய விழிப்புணர்வு அதிகம் இல்லாததாலும் அதனை பற்றி விளக்க முடியாத சூழலால் மின் காந்தத்தின் ஓர் அங்கமான மின்காந்தக் கதிர்வீச்சான ஜோதி எனும் ஒளி மயத்தை இறைவனாக அறிமுகப்படுத்தினார்.
    இறைவன் அனைத்திலும் இருக்கிறான் எனில்,அனைத்திலும் யாதுமாகி நிற்பது இந்த மின்காந்த தன்மைகளுள் ஒன்றான மின்காந்த கதிர்வீச்சான ஒளி தான்.
    உருவம் உள்ளவை உருவம் மற்றவை அருவமானவை தூணிலும் துரும்பிலும் ஊடுருவி நிற்பவை இந்த மின்காந்த தன்மையாகும் ஒவ்வொரு அணுவிலும் வியாபித்து இருப்பது இந்த மின்காந்த தன்மையாகும். ஜீவனில் ஜீவகாந்தம் ஆகவும், சீவனுக்கு புறத்தே மின்காந்த மாயும் இறைவன் உறைகிறான்.
    இந்த ஜீவ காந்தத்தை ஜீவன்கள் தனது ஒவ்வொரு புலன்கள் வழியாகவும் உட்கொள்கின்றன. மனிதன் தனது ஐம்புலன்கள் வழியாகவும் உடலுக்கு ஏற்றி கொள்கிறான்.
    வேதாத்திரி மகரிஷியின் கொள்கைப்படி வான்காந்தமானது பஞ்சபூதங்களோடு சங்கமிக்கும் போது பஞ்சபூதங்களானது சுவை,ஊரு,ஒளி,ஓசை,நாற்றம் ஆகத் தன்மாற்றம் பெறுவதாக கூறியுள்ளார். இந்த தன்மாற்றங்களை நமது ஐம்புலன்கள் மூலம் எடுத்து கொள்கிறோம்.
    இந்த தன்மாற்றங்களை உட்கொள்வதால் தான் நாம் நம் கர்மாவை அனுபவிக்கிறோம்.புதிய கர்மாக்களை உருவாக்குகிறோம். இதனால் தான் சித்தர்கள் ஐம்புலன்களை அடக்கி ஜீவ சமாதியில் அமர்ந்துள்ளனர்.
    மின்காந்தமாகிய இறைவன் தான் அனைத்தும் என்பதை உணர்ந்து அனைத்து கலைகளிலும் மின்காந்த தன்மையான இறை தன்மையை உபயோகமான முறையில் பயன்படுத்தியுள்ளனர்.
    உதாரணமாக, ஜோதிடம்,சித்த மருத்துவம், ரத்தின பரிகாரம், ஜோதிட பரிகாரம்,கோவில் வழிபாடு,ஹோமம், பாரம்பரிய வழிமுறைகள்,வாஸ்து,இசை,பரத நாட்டியம்,இலக்கியம்,மந்திரம்,சித்தர்கள் பயன்படுத்திய மாந்திரீகம்,….. என பலவற்றில் இந்த இறை தன்மையான மின்காந்த தன்மையை காண முடிகிறது.
    இறைவன் படைத்தல், காத்தல்,அழித்தல் உள்ளிட்ட செயல்களை செய்பவன் எனில், இந்த தொழில்கள் மட்டுமல்ல எந்த தொழிலும் இறை தன்மையான மின்காந்த தன்மையின்றி செய்ய முடியாது. ஆக சர்வம் மின்காந்த மயம்….

    பதிலளிநீக்கு