என் சிறுவயதில் ஏற்பட்ட பிரபஞ்சத்தின் மீதான ஆர்வம் என்னை வேறு பரிமாணத்திற்கு அழைத்துச் சென்றது. தேட தொடங்கினேன்.
நேற்றுவரை எனக்கு ஓர் மாபெரும் இரகசியம் புலப்பட்டது. அதை மக்களுக்கு அறிமுகப்படுத்தவே இந்த பக்கத்தை நான் தொடங்கினேன். இங்ஙனம் பிரசாத்


2 டிச., 2015

நான்தான் கடவுளா?


நான்தான் கடவுளா?



அறிவியல் தளம்


நான் சுமார் 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் ஒன்றுமில்லாத சூன்யத்தில் ஆழ்ந்த உறக்கநிலையில் இருந்தேன். பின் குவாட்ரிக் ஆற்றலாக மெல்ல மெல்ல விட்டு விட்டு அதிர தொடங்கினேன். 

எனது அந்த மெல்லிய ஆற்றலின் அதிர்வு ஓம் என்று இருந்த்து. அதனால் மின்புலமாகவும் காந்தபுலமாகவும் மாறினேன். பிறகு மின்காந்த அலைகளாக வெளிப்பட்டேன். அலைகளாகிய நான் அணுக்களானேன். பின் பல கோடி அணுக்களாக பிரிந்தேன். 

ஆனால் அனைத்தும் நான்தான். 

பல கோடி அணுக்களாகிய நான் பல நுண் மாற்றங்களை உணர்ந்தேன். அவை அனைத்தும் என் மனதில் பதிந்தது. அந்த அறிவை பயன்படுத்தி புதுப்புது தனிமங்களாக மாறினேன். 

அடுத்து தனிமங்களில் ஏற்பட்ட மாறுதல்களும் என் மனதில் பதிந்த்து. இதனால் என் அறிவு நாளுக்கு நாள் மேம்பட்டது. அதை பயன்படுத்தி பஞ்ச பூதங்களாக மாறினேன். 

இன்னும் என் அறிவு மேம்படவே பஞ்ச பூதங்களாகிய நான் மிருகங்களாக மாறினேன். இன்னும் இன்னும் நிறைய அறிந்த நான் மனித உடலாக மாறினேன். இப்போது எனக்கு 13.7 பில்லியன் ஆண்டுகளாக நடந்த அனைத்தும் தெரியும். 

என் எண்ணங்கள் அனைத்தும் என் பல கோடி அணுக்களில் பதிந்துள்ளது. நான் மனிதனாக மாறிய பிறகு புதிய அனுபவங்களை பெற தொடங்கினேன். அந்த அனுபவங்கள் புதிதாகவும் பிடித்த மாதிரியும் இருந்ததால் அதிலேயே உழலுகிறேன். 

என் மனது அந்த அனுபவங்களையே மீண்டும் மீண்டும் கேட்பதால் நான் பழசை முற்றிலுமாக மறந்து மாயையில் சிக்கி கொண்டுவிட்டேன். 

உங்களுக்கு ஒன்று தெரியுமா? நான் என் பழைய நிலையை அடைந்துவிட்டால் மீண்டும் என்னை(பிரபஞ்சத்தை) கட்டுபடித்திவிடுவேன்.

ஆன்மீக தளம்

பிரம்மத்தில் மோன நிலையில் இருந்த என்னை ஓம் என்ற அதிர்வு உசிப்பிவிட்டது. பின் ஆற்றலாகி அணுக்களாகி அனைத்துமாகி உள்ளேன். நான்தான் மொத்த பிரபஞ்சம். மனிதர்கள் அனைவரும் என் சிறு பகுதிதான். நீயே நான். நானே நீ.

ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய்
வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே

நட்டகல்லை தெய்வமென்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றிவந்து முணுமுணென்று சொல்லும்மந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ

{சிவவாக்கியர்}

மேலும் பயணிப்போம் இணைந்திருங்கள். 

உங்கள் பிரசாத் 

நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக